உலங்குவானூர்தி ஊழல் விவகாரத்தில் முன்னாள் விமான தளபதி உட்பட மூவர் கைது!

Saturday, December 10th, 2016

அகஸ்டாவெஸ்ட்லேண்ட் என்ற இத்தாலிய ஹெலிகாப்டர் நிறுவனத்திடமிருந்து இலஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டு இந்தியா விமான படையின் முன்னாள் தளபதியான எஸ்.பி தியாகியை ஊழல் குற்றச்சாட்டின் கீழ் விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அகஸ்டாவெஸ்ட்லேண்ட் என்ற இத்தாலிய ஹெலிகாப்டர் நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றஞ்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பிரதிபலனாக இந்தியாவிற்கு டஜன் கணக்கான ஹெலிகாப்டர்களை விநியோகிக்கும் லாபகரமான ஒப்பந்தம் ஒன்றை பெற்றுத்தந்துள்ளார்.

இந்த ஒப்பந்தமானது சுமார் 550 மில்லியன் டாலர்கள் மதிப்புடையது.அவருடைய உறவினர் உட்பட மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களை முன்னாள் தளபதி மறுத்துள்ளார்.

மேலும், இந்த ஒப்பந்தம் தொடர்பான முக்கிய முடிவுகள் கூட்டாகவும் மற்றும் பிற துறைகளும் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

_92905108_gettyimages-457860409

Related posts: