எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை இந்தியாவில் முழு அளவிலான முடக்க நிலை நீடிப்பு.!

Sunday, May 31st, 2020

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியாவில் முழு அளவிலான முடக்க நிலை, எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும், பாரிய அளவில் தொற்று தாக்கம் இல்லாத பிரதேசங்களில் உள்ள பல்பொருள் அங்காடிகள், விருந்தகங்கள், உணவகங்கள் மற்று வழிபாட்டு தலங்கள் என்பன ஜூன் 8 ஆம் திகதி திறக்கப்படலாம் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக இரவு 7 மணிமுதல் காலை 7 மணிவரை அமுலாக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கு சட்டமானது, இரவு 9 மணிமுதல் அதிகாலை 5 மணிவரை மட்டுப்படுத்தப்படவுள்ளது.

தற்போதைய தொற்று நிலைமை குறித்து அடுத்த வாரம் ஆராய்ந்ததன் பின்னர், திரையரங்குகள், உடற்பயிற்சி நிலையங்கள், பாடசாலைகள் மற்றும் சர்வதேச வாநூர்தி சேவைகளை ஆரம்பிப்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என இந்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கிய நாடுகளில் உலகளாவிய ரீதியாக இந்தியா ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 763 பேருக்கு தொற்றுறயாகியுள்ள நிலையில், 4 ஆயிரத்து 971 பேர் மரணித்துள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

82 ஆயிரத்து 370 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் 12 கோடி மக்கள் வேலை இழந்துள்ளதாக இந்திய பொருளாதார ஆய்வு நிலையம் மதிப்பிட்டுள்ளது.

Related posts:

மறு அறிவித்தல் வரும் வரை யாழ்.பல்கலைகழகத்தின் கற்றல் செயற்பாடுகள் நிறுத்தம் - பல்கலைக்கழக பதிவாளர் ...
பழைய முறையின்படி மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்தமுடியும் - தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு!
முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இன்றுமுதல் கடவுச்சீட்டு விநியோகம் - குடிவரவு மற்றும் கு...