உலகளவில் கொவிட்-19 தொற்றினால் 12 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
Monday, November 2nd, 2020
உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், 12 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, 12 இலட்சத்து ஐந்தாயிரத்து 206பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் உலகம் முழுவதும் நான்கு கோடியே 68இலட்சத்து 10ஆயிரத்து 473பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மூன்று கோடியே 37இலட்சத்து 54ஆயிரத்து 279பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை எதிர்கொண்ட முதல் நாடாக அமெரிக்கா விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆசியாவின் மிகப் பெரிய ஆயுதக் கிடங்கில் தீ விபத்து!
பட்டாசு தொழிற்சாலையில் தீ: 22 பேர் உயிரிழப்பு!
பங்களாதேஷில் அதிரடி : 200 பேர் படுகொலை!
|
|
|


