பங்களாதேஷில் அதிரடி : 200 பேர் படுகொலை!

Wednesday, July 18th, 2018

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 200 பேரை பங்களாதேஷ் காவற்துறையினர் கொலை செய்துள்ளனர்.

பங்களாதேஷில் பிலிப்பைன்ஸ் முறைக்கு சமாந்தரமான அடக்குமுறை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதால் இவ்வாறு போதைப்பொருள் வர்த்தகர்கள் கொலை செய்யப்படுவதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த மே மாதம் அந்நாட்டில் போதைப்பொருள் அடக்குமுறை வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதனை தொடர்ந்து இதுவரை சுமார் 25 ஆயிரம் பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறைந்த விலைக்கு போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் நீதிமன்ற செயற்பாடுகள் இன்றி இவ்வாறான சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பில் மனித உரிமை அமைப்புகள் பங்களாதேஷ் அரசாங்கம் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

Related posts: