பிரித்தானியாவிற்கு செல்பவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் – பிரித்தானிய வானூர்தி சங்கம் அறிவிப்பு!

Sunday, May 10th, 2020

பிரித்தானியாவிற்கு, அந்த நாட்டு வாநூர்தி நிறுவனங்கள் மூலம் செல்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என வாநூர்தி நிறுவனங்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

இரண்டாவது முறையாக கொரோனா வைரஸ் தொற்று பிருத்தானியாவை தாக்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை இதுவென சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறை வாரா வாரம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை இன்று பிரதமர் பொரிஸ் ஜோன்சனினால் அறிவிக்கப்படும் என ‘த ரைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

இதேபோன்று பிருத்தானியாவில் இருந்து வெளியேறும் பயணிகளும் அதே போன்ற பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும், அரசாங்கத்தின் வார செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பிருத்தானியாவின் போக்குவரத்து அமைச்சர் கிரான்ஸ் ஷப்ஸ்  புதிய திட்டம் குறித்து உறுதிப்படுத்தாத போதிலும், தற்போது பிருத்தானியாவில் கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மேலும் நோயாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதற்கு பிருத்தானிய அரசாங்கம் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts: