சவுதிக்கு விரையும் கட்டார் மக்கள்!

Sunday, August 20th, 2017

கட்டாரைச் சேர்ந்த ஹஜ் யாத்திரிகர்களின் நலன் கருதி, சல்வா எல்லை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்டாரைச் சேர்ந்த சுமார் 100 யாத்திரிகர்கள் மக்காவில் தங்களின் புனித கடமையை நிறைவேற்றுவதற்காக சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ளனர்.

கட்டாருக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான சல்வா எல்லைப்பகுதி கடந்த ஜுன் மாதம் மூடப்பட்டது.

கட்டார் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளித்து வருவதாக தெரிவித்து, சவூதி அரேபியா, எகிப்து, பஹ்ரேன் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் பல பொருளாதார தடைகளை விதித்திருந்தன.

அத்துடன் கட்டாருடனான அனைத்து விதமான போக்குவரத்துக்களையும் முடக்கியிருந்தன.

இந்தப் பதற்ற நிலைமை காரணமாக சவூதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியங்கள் கட்டாருடான இராஜதந்திர உறவுகளை முறித்துக்கொண்டிருந்தன.

இந்த நிலையில், சவூதி அரேபிய இளவரசர் முஹமட் பின் சல்மானுக்கும் கட்டாரின் அரேபியத் தலைவர் ஷேக் அப்துல்லா பின் அலி பின் அப்துல்லா பின் ஜஸ்ஸிம் அல்-தானிக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது.

Related posts: