மேத்யூ சூறாவளியின் தாக்கத்தை ஹேய்ட்டி தாக்குப்பிடிக்குமா?

Tuesday, October 4th, 2016

சமீபத்திய ஆண்டுகளில் அட்லாண்டிக் பகுதியில் வீசிய மிகவும் வலிமையான சூறாவளிகளில் ஒன்று, ஹேய்ட்டியில் இன்னும் சில மணிநேரங்களில் கரையை கடக்கின்றபோது வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளை உருவாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நாட்டின் தென் மேற்கு பகுதியை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படும் மேத்யூ சூறாவளி, சில பகுதிகளில் 100 சென்டி மீட்டர் மழை பெழிய செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால், தாங்களின் குறைவான உடைமைகளும் திருட்டு போய்விடும் என்ற அச்சத்தால், அங்குள்ள குடியிருப்புவாசிகள் இல்லங்களை விட்டு வெளியேற தயங்குகின்றனர்.2010 ஆம் ஆண்டு நிகழ்ந்த நிலநடுக்கத்தாலும், காலரா நோய் தொற்றாலும் ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்து ஹேய்ட்டி இன்னும் மீண்டு வருகிறது.

இந்நாட்டின் மக்கள் பலர் பலவீனமான, குடிசை வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.மேத்யூ சூறாவளியால் கன மழையும், பலத்த காற்றும் ஜமைக்காவை தாக்கியுள்ளன. ஆனால், அங்கு இது வெப்ப மண்டல புயல் எச்சரிக்கையாக தரம் குறைவானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

_91510081_3496f51a-1dee-409b-ac6d-508a33163b4f

_91510082_5f8d5e14-eacd-4caf-94e8-8219c84469f2

Related posts: