துபாயில் திறந்து வைக்கப்பட்டது பிரமாண்டமான இந்து கோவில் – அனைத்து தரப்பினருக்கும் அனுமதி!

Wednesday, October 5th, 2022

துபாயில் பிரமாண்டமாக நிர்மானிக்கப்பட்டுள்ள இந்து ஆலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அந்த ஆலயம் துபாயில் உள்ள ஜெபல் அலி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தின் நிர்மானப்பணிகள் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. சுமார் இரண்டு ஆண்டுகளில் பின்னர் பணிகள் நிறைவடைந்துள்ளன. இன்றுமுதல் குறித்த ஆலயம் பொது மக்களின் பார்வைக்காக அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 6:30 மணிமுதல் இரவு 8 மணி வரை ஆலயம் திறந்திருக்கும் அதேவேளை, கூட்ட நெரிச்லை தவிர்க்க பார்வையாளர்களுக்கு கோவில் நிர்வாகம் கியூஆர் குறியீடு அடிப்படையிலான முன்பதிவு முறையை செயல்படுத்தியுள்ளது.

இந்த கோவில் அனைத்து மதத்தினரையும் வரவேற்பதுடன், வழிபாட்டாளர்கள் மற்றும் பிற பார்வையாளர்களுக்கு நுழைவதற்கும் ஆலய நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. நாளாந்தம் சுமார் 1000 முதல் 1200 பக்தர்கள் வழிபாடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோவில் ஏற்கெனவே அமைந்துள்ள சிந்தி குரு தர்பார் கோயிலின் விரிவாக்கம் ஆகும். சிந்தி குரு தர்பார் கோவிலானது, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பழமையான இந்து கோவில்களில் ஒன்றாகும்.

இதனிடையே, துபாயின் புதிய இந்து கோவில் அமைக்கப்பட்டிருப்பதன் மூலம் துபாயில் வசிக்கும் இந்து மதத்தினரின் பல ஆண்டு கனவு நிறைவேறியுள்ளதாக பலர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: