ஈராக்கில் அமெரிக்க படை மீது வீசப்பட்ட எறிகணையில் இரசாயன பொருளா?
Thursday, September 22nd, 2016
அமெரிக்க படை துருப்புகள் தங்கியிருந்த ஈராக் இராணுவ தளம் மீது வீசப்பட்ட எறிகணையில் ஏதேனும் ரசாயன ஆயுதம் உள்ளதா என்று அமெரிக்க இராணுவம் விசாரணை செய்து வருகிறது.
இது குறித்து நடத்தப்பட்ட ஆரம்ப சோதனை ஒன்றில், சல்ஃபர் மஸ்டர்டு எனப்படும் கடுகு வாயு வேதிப்பொருளின் எச்சம் இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இரண்டாவது சோதனையில் மேற்கூறிய வேதிப்பொருள் கண்டறியப்படவில்லை.
ஈராக்கின் மொசூல் நகரின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் விமான தளத்தின் மீது இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ். அமைப்பு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் யாரும் காயமடையவில்லை.

Related posts:
குடியேற்றங்களுக்கு அங்கீகாரம் வழங்க இஸ்ரேலில் சட்டமூலம்!
பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் மஷ்ரபே பாராளுமன்றுக்கு தேர்வு!
அமெரிக்காவில் தொடரும் பேரவலம் - கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 450 பேர் பலி!
|
|
|


