குடியேற்றங்களுக்கு அங்கீகாரம் வழங்க இஸ்ரேலில் சட்டமூலம்!

Wednesday, December 7th, 2016

மேற்குக் கரையில் அமைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான குடியேற்ற வீடுகளை சட்டபூர்வமாக்கும் சர்ச்சைக்குரிய சட்டமூலம் ஒன்று இஸ்ரேல் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய கல்வி அமைச்சர் நெப்தாலி பென்னட்டினால் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த சட்டமூலம், இஸ்ரேல் ஆட்புலத்திற்குள் இணைக்கப்பட்ட நிலப்பகுதிகள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலப்பகுதிகள் தொடர்பில் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையில் தொடர்ந்து பிரச்சினை உள்ளது.

இது நிலத்தை அபகரிக்கும் முயற்சி என்று விமர்சகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கொண்டுவரப்பட்டிருக்கும் வரைவு சட்டமாவதற்கு பாராளுமன்றத்தில் மூன்று வாக்கெடுப்புகளில் அங்கீகரிக்கப்பட வேண்டியுள்ளது.

இதன்மூலம் சட்ட அனுமதி இன்றி கட்டப்பட்டிருக்கும் சுமார் 4000 யூத குடியேற்றங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சட்டத்தின்படி இந்த குடியேற்றங்கள் சட்டவிரோதமாகும். இதற்கு முன்னரும் இதுபோன்றதொரு சட்டமூலம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது மேற்குக் கரை அமோன குடியேற்றம் பற்றிய அரசியல் சர்ச்சை காரணமாக தோல்வி அடைந்தது. இந்த அமோனா யூத குடியேற்றம் வரும் டிசம்பர் 25 ஆம் திகதி அகற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

coltkn-12-07-fr-01163206566_5077531_06122016_mss_cmy

Related posts: