அமெரிக்காவில் நுழைய விதிக்கப்பட்ட தடை மீளப் பெறப்படாது – வெள்ளை மாளிகை!

Thursday, February 9th, 2017

 

சிரியா உள்ளிட்ட 7 முஸ்லிம் நாடுகளின் பயணிகள் அமெரிக்காவில் நுழைய விதிக்கப்பட்ட தடை மீளப் பெறப்படாது என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

சிரியா, ஈராக், ஈரான், லிபியா, ஏமன், சோமாலியா, சூடான் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மற்றும் பயணிகள் அமெரிக்காவில் நுழைய ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் விதித்த தடையை சியாட்டிலில் உள்ள அமெரிக்க நீதிமன்றம் நீக்கியுள்ளது.

இது தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சீன் ஸ்பைசர் அமெரிக்காவின் பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசு வெற்றி பெறும். தடை உத்தரவை மீளப் பெறுவது தொடர்பான பேச்சுக்கே இடமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் ட்ரம்பின் தடை உத்தரவுக்கு எதிராக கலிபோர்னியா உட்பட 16 மாகாணங் களின் சட்டமாஅதிபர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். தடை உத்தரவுக்கு எதிராக அந்தந்த மாகாணங்களில் நடைபெறும் வழக்குகளில் அவர்கள் முன்னிலையாகி தங்கள் கருத்தை வலியுறுத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

IMG_0207

Related posts: