இஸ்ரேலுக்கு விஜயம் செய்யும் இந்திய பிரதமர் !
Tuesday, July 4th, 2017
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக இன்று இஸ்ரேல் நாட்டுக்கு செல்கிறார். இவ்வாறு இஸ்ரேல் நாட்டுக்கு செல்லும் முதலாவது இந்திய பிரதமர் என்றப் பெருமையை மோடி பெறுகின்றார்.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு மற்றும் ஜனாதிபதி ரிவ்லின் ஆகியோரை சந்திக்கிறார்.இரு நாடுகளுக்கு இடையே பல முக்கிய உறவுகளை உறுதிப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்துகிறார்கள்.இந்த பேச்சுவார்த்தையில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக விவசாயம், தண்ணீர், கண்டுபிடிப்புகள், வளர்ச்சி, அறிவியல் தொழில்நுட்பம், விண்வெளி ஆகிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிகிறது.
Related posts:
வைத்தியசாலையில் தீ: தென்கொரியாவில் இதுவரை 33 பேர் பலி!
ஜூலை 6 முதல் சிறுவர் பகல்நேர பராமரிப்பு நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு அனுமதி - சுகாதார சேவைகள் ப...
வாடகை அடிப்படையிலான கட்டடங்களை அமைச்சுகளின் பாவனைகளுக்கு பெற்றுக்கொள்ள - ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித...
|
|
|


