ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்கும் நியமங்களை மாற்றியமைக்க அரசாங்கம் தயார் – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உறுதியளிப்பு!

Monday, July 4th, 2022

அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்ட பட்டதாரிகளை, ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்கும்போது தடையாக உள்ள வயது வரம்பு தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த உறுதியளித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த சுசில் பிரேமஜயந்த, அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களில் பலர், ஆசிரியர் சேவையில் இணைந்துக்கொள்ள விருப்பம் வெளியிட்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டினார்.

அரச சேவையாளர்களின் நியமன வயது வரம்பு 45ஆக உள்ளது. எனினும் ஆசிரியர் சேவைக்கான நியமங்களின்படி, 35 வயதுக்கு உட்பட்டவர்களே சேவையில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்.

இந்தநிலையில், இந்த வயது வரம்புக்கு அப்பாற்பட்ட, அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்ப்பதற்காக நியமங்களை மாற்றியமைக்க அரசாங்கம் தயாராக உள்ளது.

எனினும் இந்த விடயத்துக்கு தொழிற்சங்கங்களின் இணக்கங்களை பெறவேண்டியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

தொழிற்சங்கங்களின் இணக்கம் ஏற்பட்டால், இந்த விடயத்தில் தீர்வை எட்டமுடியும் என்றும் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார்.

இதேவேளை, நடப்பு பிரச்சினைகளுக்கு மத்தியில், முதலாம் வகுப்புக்கு மாணவா்களை இணைக்கும் திகதியை நீடிக்க முடியும் என்றும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: