பஸ் கட்டணம்  தொடர்பில் எதிர்வரும் 20ம் திகதி விசேட பேச்சுவார்த்தை !

Tuesday, June 13th, 2017

பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் எதிர்வரும் 20ம் திகதி விசேட கலந்துரையாடல் இடம்பெற்று தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று பிரதியமைச்சர் அசோக்க அபேசிங்ஹ தெரிவித்தார்.

பஸ் கட்டண திருத்தம் தொடர்பான தேசிய கொள்கைக்கு அமைய ஒவ்வொரு வருடமும் ஜுலை மாதம் 1 ஆம் திகதி பஸ் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, குறைந்த பட்ச கட்டணம் 6.5 சதவீதம் வரை அதிகரிக்கப்பட வேண்டும் என தான் அரசாங்கத்திற்குயோசனை முன்வைத்திருப்பதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இனை தெரிவித்தார். பணவீக்கம் அதிகரித்துள்ளதை அடுத்து முன்வைக்கப்பட்ட இந்த யோசனையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts:

உருமாறிய பிரித்தானிக் கொரோனவால் நாட்டு மக்களுக்கு ஆபத்து இல்லை - இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி தெரிவிப்...
நீருக்கு மேலான சுற்றுலா வீடுகள் மற்றும் சுற்றுலா விடுதிகளுடன் கூடிய 50 அதிசொகுசு சுற்றுலா விடுதிகளை ...
தற்போதைய நெருக்கடியை மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை வழங்குவதற்கு ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்கிறேன்...