மின்னல் தாக்கியமையே நாடளாவிய ரீதியில் மின்தடைக்கு காரணம் – இலங்கை மின்சார சபை தெரிவிப்பு – திடீர் மின்தடையால் உணவகங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருந்ததாக குற்றச்சாட்டு!

Sunday, December 10th, 2023

நாடளாவிய ரீதியில் நேற்று ஏற்பட்ட மின்தடைக்கு மின்னல் தாக்கியமையே காரணம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

கொத்மலை – பியகம மின் விநியோக கட்டமைப்பிற்கு மின்னல் தாக்கியமையினால், நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று மாலை 5.15 அளவில் திடீர் மின் துண்டிப்பு ஏற்பட்டு, இரவு 11.30 அளவிலேயே மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக

நாடளாவிய ரீதியில் சுமார் 5 மணித்தியாலங்களுக்கு மேலாக நேற்றையதினம் மாலை 5 மணி தொடக்கம் இரவு 10 மணிவரை மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது.

கொத்மலையில் இருந்து பியகம வரை செல்லும் வீதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் படிபடியாக சில பகுதிகளில் மின்சாரம் வழமைக்குத் திரும்பியிருந்த நிலையில் இரவு 10 மணிக்கு பின்னர் பலபகுதிகளில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்திருந்தது

இதனிடையே திடீர் மின்தடை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தக்கட்டுள்ளது

இதற்கமைய வர்த்தக நிலையங்களில் உணவகங்கள் மற்றும் வெதுப்பாகங்கள் வியாபார நிலையங்கள் மின் ஒட்டும் நிலையங்கள் என பல்வேறு தொழில் முயற்சியில் ஈடுபடுவார்கள் மின்தடை காரணமாக மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிலும் உணவகங்களை மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

நாளாந்தம் உற்பத்தி செய்கின்ற உணவினை விற்பனை செய்து அதில் கிடைக்கப்பெறுகின்ற வருமானத்தில் வாழ்வாதாரத்தை மேற்கொண்டுவடும் உணவகங்கள் நேற்றையதினம் இரவு வியாபார நடவடிக்கைகளுக்காக உற்ப்பத்தி செய்யத உணவுப்பொருட்கள் அனைத்தும்  வீணடிக்கப்பட வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளதாகவும் உணவக உரிமையாளர்களே அதிகளவாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் நாடு முழுவதும் நேற்றையதினம் தடைப்பட்டிருந்த, மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் விநியோக மார்க்கத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று மாலை முதல் நாடு முழுவதும் மின்சார விநியோகம் தடைப்பட்டிருந்தது. இதனையடுத்து மின்சார விநியோகத்தை சீரமைக்கும் பணிகள் இலங்கை மின்சார சபையினால் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டது.

மின்சார விநியோக தடையினால் பல பகுதிகளில் நீர் வழங்கல் தடைப்படக்கூடுமென நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்திருந்தது.

எனினும், நீர் விநியோகத் தடையினால் சில வைத்தியசாலைகளுக்கு தாங்கி ஊர்திகள் மூலம் நீர் விநியோகம் செய்யப்பட்டதாக நீர் வழங்கல், மற்றும் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மின்சாரம் தடைப்பட்டுள்ள காலப்பகுதியினுள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு, நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக பதில் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்திருந்தார்.

முன்பாதாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக சில சூழ்ச்சிகளால் நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் தடைப்பட்டிருந்மையும் குறிப்பிடத்தக்கது

000

Related posts: