வாசனைத் திரவியங்களை பாவனைசெய்யும் இலங்கையருக்கு ஆபத்தா? எச்சரிக்கை விடுக்கும் நுகர்வோர் விவகாரங்கள் ஆணையம் !
Friday, April 19th, 2019
வாசனை திரவியங்கள் பயன்படுத்துபவர்கள் அதன் தரம் தொடர்பில் ஆராய்ந்த பின்னர் பயன்படுத்துமாறு இலங்கை நுகர்வோர் விவகாரங்கள் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.
பயன்பாட்டிற்கு தகுதியற்ற வாசனை திரவியங்கள் மற்றும் சவர்க்காரங்கள் இலங்கை சந்தையில் இறக்குமதி செய்யப்படுவதாக சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
புத்தாண்டின் போது மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆணையத்தின் பணிப்பாளர் பவுஸர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 20ஆம் திகதி ஆரம்பித்த இந்த சுற்றிவளைப்பு எதிர்வரும் 25 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் நுகர்வோர் விவகாரங்கள் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Related posts:
ஐந்து மாவட்டங்களுக்கு டெங்கு ஒழிப்பு பிரிவு எச்சரிக்கை - டெங்கு ஒழிப்பு பிரிவு!
நாட்டை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இலகுவில் தொற்றக்கூடிய தன்மையைக் கொண்டது - சுகாதார அமைச்சு எச்சரிக்...
நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தலைமையில் நடைபெற்றது வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுகூட்டம் - மக்கள்...
|
|
|


