தபால் திணைக்கள ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில்!
Monday, June 12th, 2017
தபால் திணைக்கள ஊழியர்கள் சங்கங்கள் இன்று(12) நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தபால் அலுவலகத்திற்காக கட்டப்பட்ட கட்டிடத்தில் சுற்றுலா விடுதியை நடாத்த தீர்மானித்துள்ளமை மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் தபால் திணைக்கள ஊழியர் சங்க முக்கியஸ்தர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
இது குறித்து உரிய தீர்வொன்று கிடைக்காதவிடத்து எதிர்வரும் 29ம் திகதி நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் குறித்த சங்கம் அரசுக்கு எச்சரித்துள்ளது
Related posts:
22இல் சைட்டம் குறித்த மருத்துவ சங்கத்தின் மனு மீதான விசாரணை!
கோரோனா தொற்று முன்னெச்சரிக்கை: இலங்கையில் 2961 கைதிகள் பிணையில் விடுதலை!
சேவையில் இருந்து நீக்கப்பட்ட எழுநூறு பேருந்துகளை ஏலம் விடுவதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானம்!
|
|
|


