ஜூலை 6 முதல் சிறுவர் பகல்நேர பராமரிப்பு நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு அனுமதி – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு!

Tuesday, June 30th, 2020

நாடு முழுவதுமுள்ள பகல்நேர பராமரிப்பு நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அனுமதி வழங்கியுள்ளார்.

2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 06 ஆம் திகதி தொடக்கம் பகல்நேர பராமரிப்பு (பகல்நேர பராமரிப்பு நிலையங்களின் மொத்த பிள்ளைகளின் எண்ணிக்கைக்கான) நிலையங்களில் உள்வாங்கக்கூடிய மொத்த கொள்திறன் எண்ணிக்கைக்காக அந்த நிலையங்கள் திறக்கப்பட்டு முன்னெடுக்கப்படுவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

தற்பொழுதும் மீண்டும் திறக்கப்படும் பகல்நேர பராமரிப்பு நிலையங்கள் 75 சதவீதமான கொள்திறனுடன் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு ஜூலை 06 ஆம் திகதியுடன் சிறுவர்களின் எண்ணிக்கையை 100 சதவீதமாக அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குவதாகும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான அனைத்து பகல்நேர பராமரிப்பு நிலையங்களிலும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்புக்காக கடைபிடிக்கப்பட வேண்டிய சுகாதார வழிகாட்டி ஆலோசனைகள் வலுவான முறையில் கடைபிடிப்படுவது கட்டாயமாகும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடததக்கது.

Related posts: