பல்கலைக்கழக நுழைவுக்கான Z புள்ளி இந்த வாரம் வெளியாகும் – பல்கலைக் கழகங்களை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னேடுக்குமாறும் கோரிக்கை!

Monday, October 25th, 2021

2020 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளின் இசட் புள்ளிகள் (Z Score) இந்த வாரம் வெளியாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்தின் கீழ் 2020 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழக நுழைவுக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி விபரம் கடந்த மாதம் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அனைத்து பாடசாலைகளினதும் ஆரம்பப் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பல்கலைக்கழகங்களை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் முன்னேடுக்குமாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டு இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதாக கொவிட் பரவல் காரணமாக சுமார் 2 வருடங்களாக பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன.

அத்துடன், இணைய வழி மூலம் கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், சில நேரங்களில் அது நடைமுறைக்கு ஏற்றதல்ல என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்நிலையிலேயே பல்கலைக்கழகங்களை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னேடுக்குமாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அரசாங்கத்திடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் இராணுவத்தினரை ஈடுபடுத்தும் எதிர்பார்ப்பு இல்லை - இராணுவ தளபதி தெரிவிப்ப...
கடந்த வாரம் போன்றே இவ்வாரமும் செயற்படுத்துங்கள் - பாடசாலைகள் தொடர்பில் கல்வியமைச்சு அறிவிப்பு!
மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு - பிரித்தானியா மற்றும் பிரான்சில் அபாயகர நிலவரம் - உலகளவிலும் மீண்...