ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவநாதனின் சேவை மறக்கமுடியாததொன்று – உதவிக்கல்விப்பணிப்பாளர் கணேசலிங்கம்!

Saturday, August 11th, 2018

கிளிநொச்சி கல்வி வலயத்துக்குட்பட்ட கிராமங்களில் சுமார் 15000 மாணவர்கள் போக்குவரத்து வசதிகள் தேவையுடைய மாணவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களின் தேவைகளை சரியாக இனங்கண்டு வடமாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன் அவர்கள் வழங்கி வருகின்ற துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் உதவியானது எமது மாணவர்களுக்கு பெரிதும் பயனுடையது என்பது மறுப்பதில்லை. இவ்வாறு கிளிநொச்சி கல்வி வலயத்தின் உதவிக் கல்விப்பணிப்பாளர் கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.

மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் அவர்களின் நிதியீட்டத்தினூடாக 20 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (08.08.2018) நடைபெற்றது. இந்நிகழ்வில் வலயக்கல்வி அலுவலகத்தின் சார்பில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகளையும் வழங்கிவைத்து கருத்து தெரிவிக்கும்போதே உதவிக்கல்விப்பணிப்பாளர் கணேசலிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.

எமது மாவட்ட மாணவர்களின் கல்வி நிலை வளர்ச்சி தொடர்பாக உறுப்பினர் தவநாதன் அவர்கள் என்னிடம் பலதடவைகள் கலந்துரையாடியிருக்கிறார். உண்மையில் அடிமட்ட கிராமங்களுக்கு சென்று வறுமைக்குட்பட்ட மாணவர்களை தெரிவுசெய்து அவர்களின் கல்வி நிலையில் நல்ல முன்னேற்றத்தை கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் அவரிடம் நிறையவே இருக்கின்றது.

எனவே மாணவர்கள் இவ்வாறான உதவிகளை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எமது மாவட்டத்தின் துறை சார்ந்த அதிகாரிகளாக, துறைசார் நிபுணர்களாக எமது மாணவர்கள் எதிர்காலத்தில் மிளிர வேண்டும்

கெளரவ மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் இதுவரை எமது வலயத்தினூடாக 75 துவிச்சக்கரவண்டிகளை வழங்கி வைத்திருக்கின்றார்.

இவரது உதவிகள் தொடர்ச்சியாக எமது கல்வி வலயத்திற்கு தேவையாக உள்ளது. எனவே மாணவர்களின் கல்வி சார் செயற்பாடுகளுக்கு கெளரவ உறுப்பினர் தவநாதன் அவர்கள் செய்துவருகின்ற உதவித்திட்டங்களுக்கு எமது வலயக்கல்வி அலுவலகம் சார்பாக மிகுந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் எனவும் உதவிக் கல்விப் பணிப்பாளர் கணேசலிங்கம் அவர்கள் மேலும் தெரிவித்தார்.

Related posts:


பெண்கள் மீதான வன்முறைகள் கட்டுக்குள் வரும் யாழ்ப்பாண மூத்த பொலிஸ் அத்தியகட்சர் ஸ்ரனிஸ்லஸ் தெரிவிப்பு...
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது - பொலிஸ் ஊடகப் ப...
நாட்டில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப்போவதில்லை - நிதி அமைச்சர் பசில் உறுதிபடத் ...