கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Thursday, June 10th, 2021

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய ஆயிரத்து 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான  அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இன்றையதினமும் நாட்டின் பல இடங்களில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு நகரில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறுவோரை அடையாளம் காண்பதற்காக ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலத்தில் போதைப் பொருட்களுடன் கைதாகின்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பித்தக்கது.

Related posts:


மழை அல்லது இடியுடன் கூடிய மழை தொடரும்: திருநெல்வேலி வானிலை ஆய்வு நிலையப் பொறுப்பதிகாரி தெரிவிப்பு
வன்னி ஹோப் நிறுவனத்தின் அனுசரணையில் வறிய மாணவர்களின் கற்றலுக்காக கணனிகளும் ஸ்மாட் போன்களும் வழங்கிவை...
எதிர்வரும் 19 ஆம் திகதிமுதல் கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை இடையே மீண்டும் இரவு நேர தபால் ரயில் சேவ...