அனர்த்தங்களால் 180 பேர் பலி.

Tuesday, May 30th, 2017

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மாலை நேர நிலவரப்படி, 109 பேர் காயமடைந்துள்ள அதேநேரம், மேலும் 110 பேர் காணமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது மொத்தமாக 15 மாவட்டங்களில் 5 லட்சத்து 88 ஆயிரத்து 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

அதிகபடியான மரணங்கள் இரத்தினபுரியில் இடம்பெற்றுள்ளனஅங்கு இதுவரையில் 77 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதுஅதேநேரம் களுத்துறை மாவட்டத்தில் 54 பேரும், மாத்தறையில் 24 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதுவரையில் 640 வீடுகள் முற்றாகவும், 5 ஆயிரத்து 329 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளனஅதேநேரம், பாதுகாப்பான 368 இடங்களில், 76 ஆயிரத்து 902 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளதுஇரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிக அளவான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

அங்கு 38 ஆயிரத்து 323 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கம்பஹா மாவட்டத்தில் 11 ஆயிரத்து 692 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 9 ஆயிரத்து 370 பேரும் முகாம்களில் தங்கி இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது

இதேவேளை, மின்சார தடைகள் குறித்த முறைப்பாடுகளுக்கு புதிய இலக்கத்தை இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது

இதன்படி, 0113 030 303 என்ற இலக்கத்துக்கு மின் தடை குறித்த தகவல்களை வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுஇதற்கிடையில் நிலவும் அனர்த்த நிலைகளை கருத்திற்கொண்டு எட்டு மாவட்டங்களின் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று முதல் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது

இதன்படி கொழும்பு, கம்பஹா, காலி, மாத்தறை, களுத்துறை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களின் பாடசாலைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையில் மூடப்பட்டிருக்கும் என்று கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்

Related posts: