ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்துக்காக இதுவரை 47 ஆயிரத்து 866 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவிப்பு!

Thursday, May 7th, 2020

கடந்த மார்ச் 20 ஆம் திகதிமுதல் இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 47ஆயிரத்து 866 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 12 ஆயிரத்து 448 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றின் பரம்பலை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார தரப்பினரது ஆலோசனைக்கு அமைய அரசாங்கத்தால் நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்க சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்களின் நலன்களை மையப்படுத்தி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறி பொது வெளிகளில் சென்றவர்களை பொலிசார் கைது செய்து நட்டத்தின் முன் நிறுத்திவருகின்றனர்.

அந்தவகையில் இன்று நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலயத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த காலப்பகுதியில் 209 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதிமுதல் இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய   866 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 12 ஆயிரத்து 448 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: