தேர்தல் கடமைகளுக்கான மேலதிக நேர பணிகள் தற்காலிமாக இடைநிறுத்தம் – மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அறிவிப்பு!
Sunday, February 19th, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான, அஞ்சல்மூல வாக்களிப்பு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைள் தொடர்பில் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசனை வழிக்காட்டி ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த ஆலோசனை வழிக்காட்டி, நேற்றையதினம் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் மாவட்ட பிரதி மற்றும் உதவி தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளையதினம்முதல் வழமையான அலுவலக கடமை நேரம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தேர்தல் கடமைகளுக்கான மேலதிக நேர பணிகள் தற்காலிமாக இடைநிறுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தீர்வு கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் யாழ்.மாநகர சபை சுகாதார தொழிலாளர்கள் திட்டவட்டம்!
நைஜீரிய நாட்டுப் பிரஜைகளுக்கு இலங்கை வரக் கட்டுப்பாடு!
நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்!
|
|
|


