எதிர்வரும் 31ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் தேசிய பல் போதனா வைத்தியசாலை திறப்பு நிகழ்வு!
Sunday, January 29th, 2017
பத்து மாடிகளைக் கொண்ட கட்டடத் தொகுதியாக அமைக்கப்பட்டுள்ள இலங்கை தேசிய பல் வைத்திய போதனா வைத்தியசாலை எதிர்வரும் 31ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.
இதற்கு 800 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இதில் நவீன உபகரண வசதிகளுக்காக மேலும் ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நாளாந்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைகளை இதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். இந்த வைத்தியசாலையின் இரண்டாவது கட்டடத் தொகுதிக்காக அடிக்கல் நாட்டு விழாவும் அன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

Related posts:
ஆசிய பசுபிக் வலையத்தின் சிறந்த நிதி அமைச்சருக்கான விருது நிதி அமைச்சருக்கு!
புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் தொகையை நாட்டிலேயே அழிக்க முடியும் - மத்திய சுற்றாடல் அத...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 200 வீடுகளை நிர்மாணிக்க பிரதமர் யோசனை முன்மொழிவு!
|
|
|


