வன்னி ஹோப் நிறுவனத்தின் அனுசரணையில் வறிய மாணவர்களின் கற்றலுக்காக கணனிகளும் ஸ்மாட் போன்களும் வழங்கிவைப்பு!

Tuesday, September 14th, 2021

அவுஸ்ரேலியாவில் இயங்கி வரும் தொண்டு நிறுவனமான வன்னி ஹோப் நிறுவனத்தின் அனுசரணையில் மலைய சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் டிஜிட்டல் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் வறிய மாணவர்களுக்கு  ஸ்மாட் போன்களும் வளம் குறைந்த பாடசாலைகளுக்கு தலா 5 கணினிகளும் அண்மையில் வழங்கப்பட்டன.

இதனடிப்படையில் யா/குடத்தை கரையூர் அ.த.க.பாடசாலை, யா/மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலை, யா/புங்குடுதீவு மகா  வித்தியாலயம்  ஆகிய  பாடசாலைகளுக்கு தலா 5 கணினிகளும்

யா/சரவணை நாகேஸ்வரி வித்தியாலயம் , யா/ஊர்காவற்றுறை சென் அன்ரனீஸ் கல்லூரி ஆகிய  பாடசாலைகளில் க.பொ.த சாதாரண தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு  ஸ்மாட்போன்களும் வழங்கப்பட்டன.     

கொரோனா பாதுகாப்பு சுகாதார வழிகாட்டலுக்கு அமைய நடைபெற்ற இந்த நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் கலந்து கொண்டு குறித்த பொருட்களை வழங்கிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: