விரைவில் அமைச்சர் பைசர் முஸ்தபாக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!

Monday, August 21st, 2017

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்னும் நான்கு வாரங்களுக்குள் கொண்டு வரப்படும் என்றும், அதற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வரகின்றதெனவும் ஐக்கிய தேசியக்கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இரண்டரை வருடங்களாக உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படவில்லை. உள்ளூராட்சி சபைகளில் ஊழல்கள் நிரம்பிக் காணப்படுகின்றன. இதை அமைச்சர் பைசர் முஸ்தபாவின்கவனத்துக்கு நாம் பல தடவைகள் கொண்டு வந்தபோதிலும் தேர்தலை துரிதமாக நடத்துவதற்கோ அல்லது ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கோ அவர் முயற்சி செய்யவில்லை.

இதனால் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வரும்யோசனையை நான் முன்வைத்தபோது ஐக்கிய தேசியக் கட்சி எம்.பிக்கள் அதற்கு இணக்கம் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்தே பிரேரணைக்கான ஏற்பாட்டை நாம் செய்துள்ளோம். இந்தப் பிரேரணை இன்னும் நான்கு வாரங்களுக்குள் கொண்டு வரப்படும். அதற்கான சட்டமூலம் தயாரிக்கப்படுகின்றது. இதற்கு மஹிந்த தரப்பினரும் ஆதரவு வழங்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர். இதில் நாம் வெற்றி பெறுவோம் என்றார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் பைசர் முஸ்தபா, எந்தவொரு பிரேரணையையும் தான் எதிர்கொள்ளத் தயார் என்றும், தனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரும் அளவுக்கு தான் எந்தப் பிழையும் செய்யவில்லை என்றும் கூறினார்

Related posts: