விசாரணைப் பிரிவு விஸ்தரிக்கப்படும்!- பொலிஸ் மா அதிபர்!

Wednesday, June 15th, 2016

நிதி மோசடி விசாரணைப் பிரிவு விஸ்தரிக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில் –

நிதி மோசடி விசாரணைப் பிரிவினை விஸ்தரித்து அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்து இன்னும் செயற்திறனுடைய ஓர் பிரிவாக மாற்றப்படும். நிதி மோசடி விசாரணைப் பிரிவு கலைக்கப்பட உள்ளதாக செய்யப்படும் பிரச்சாரங்களில் உண்மையில்லை.

நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் பாரியளவு சேவை ஆற்றப்படுகின்றது. பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு இந்தப் பிரிவினை மூட வேண்டும் என்ற தேவை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே இந்த நபர்கள் பல்வேறு போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். நிதி மோசடிகள் குறித்த விசாரணைகளை நடாத்துவது அவ்வளவு சுலபமான காரியமன்று.

அதற்கு தகுதியானவர்கள் இருக்க வேண்டும்.அவர்களுக்கு போதியளவு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். இதனால் தகுதியும் திறமையும் உடைய அதிகாரிகளைக் கொண்டு சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து நிதி மோசடி விசாரணைப் பிரிவினை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் நேர்காணலில் தெரிவித்துள்ளார்

Related posts: