நாட்டில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப்போவதில்லை – நிதி அமைச்சர் பசில் உறுதிபடத் தெரிவிப்பு!

Tuesday, November 23rd, 2021

மத்திய வங்கி பிணை முறி மோசடியின் மூலம் பெறப்பட்ட சொத்துக்கள் அரசு உடைமையாக்கப்பட்டது போன்று மோசடி நடவடிக்கைகள் ஊடாக பெறப்பட்ட சொத்துகள் என சட்ட ரீதியில் உறுதி செய்யப்படும் சொத்துக்களும் அரசுடைமையாக்கப்படும் என்று நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்வாறான மோசடிகள் தொடர்பான தகவல்கள் இருக்குமாயின் அவற்றை முன்வைக்குமாறும் நிதி அமைச்சர், நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்

2022 ஆண்டு வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்திற்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே ,அவர் இவ்வாறு குறிப்பிட்டதுடன் நாட்டில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப்போவதில்லையென்றும் கூறியிருந்தார்.

நாடு எதிர்கொண்டுள்ள இக்கட்டான இக்காலக்கட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்புவோம் என்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்..

இதேவேளை, நேற்றைய தினம் 2022 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பிற்கு ஆதரவாக 153 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் செலுத்தப்பட்டன.

இதனடிப்படையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் இம்முறை 2022 வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: