இலங்கை விவகாரத்தில் சாதகமான பயணிக்கும் டொனால்ட் ட்ரம்ப்!

Monday, January 23rd, 2017

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றுள்ளதால் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையில் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பதவியில் மாற்றம் கிடையாது என  செய்திகள் தெரிவிக்கின்றன.

புதிய ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டதன் பின்னர், அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்ட அனைத்து ராஜதந்திரிகளையும் பணி நீக்கி புதிய ராஜதந்திரிகளை நியமிப்பது அமெரிக்காவில் வழமையான விடயமாகும். எனினும், இலங்கைக்கான அமெரிக்கத் தூதவர் அதுல் கேசப் பணி நீக்கப்பட மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதுல் சேகப் ஒர் தொழில்சார் ராஜதந்திரி என்பதனால் அவரது பதவியில் மாற்றம் செய்யப்படாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

151208091120_trump_gch_1_624x351_getty_nocredit

Related posts: