தெற்கு மடகாஸ்கரில் 1.5 மில்லியன் மக்கள் பட்டினி – ஐ.நா தகவல்!
Friday, October 28th, 2016
தெற்கு மடகாஸ்கரில், எல் நினோ வானிலை கால மாற்றம்காரணமாக கடுமையான வறட்சியால் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் மக்கள் பட்டினினை எதிர்கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஆண்ரோய் என்ற பகுதியில் மக்காச்சோளத்தின் விளைச்சல் 80 % அளவில் குறைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவுகளுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது. மரவள்ளிக்கிழங்கு உட்பட, பிற அத்தியாவசியப் பொருட்கள், கையிருப்பில் குறைந்த அளவே உள்ளன. விதைகளை சாப்பிட்டும், தங்கள் விவசாய கருவிகள் மற்றும் விலங்குகளை விற்றும் அங்குள்ள மக்கள் பசியை சமாளித்து வருகின்றனர்.

Related posts:
குடியேறிகளை பகிர்ந்து கொள்ளும் 'கோட்டா': ஹங்கேரி வாக்கெடுப்பு!
சுதந்திர தினத்துக்குள் பிரதமராகிறார் இம்ரான்!
அமெரிக்கா, பிரிட்டன் விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு !
|
|
|


