ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு!
Saturday, September 28th, 2019
ஆப்கானிஸ்தானில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் வாக்குச்சாவடியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் காபூல் நகரில் உள்ள பகராம் மாவட்டத்தில் சம்சாத் தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் காலை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
இதனால் பொதுமக்கள் பயத்தில் அலறியடித்து ஓடினர். இந்த குண்டுவெடிப்பில் 15 பேர் காயமடைந்தனர், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் வாக்குப்பதிவு தாமதமானது.
இந்த தாக்குலை தலிபான் பயங்கரவாதிகள் நடத்தியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து வாக்குச்சாவடிகளில் மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Related posts:
கடலில் விழுந்த ஈஜிப்ட்ஏர் விமானத்தின் பாகம் கண்டெடுப்பு!
அமெரிக்காவில் 50 பேரை பலியெடுத்த துப்பாக்கி சூடு: பொறுப்பேற்றது ஐ.எஸ் அமைப்பு!
லொறியுடன் வான் மோதி கோர விபத்து - 9 பேர் பலி!
|
|
|


