அமெரிக்காவில் 50 பேரை பலியெடுத்த துப்பாக்கி சூடு: பொறுப்பேற்றது ஐ.எஸ் அமைப்பு!

Tuesday, October 3rd, 2017

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது என ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவான செய்தி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த கொடூர செயலில் ஈடுபட்டு லாஸ் வேகாஸ் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட Stephen Paddock சில மாதங்களுக்கு முன்னர் இஸ்லாமியராக மதம் மாறியவர் என்ற தகவலையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

ஆனால் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு வெளியிட்டுள்ள குறித்த தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது மட்டுமல்ல விசாரணைக்கு பின்னரே இதன் நிஜ பின்னணி தெரியவரும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

ஞாயிறு இரவு லாஸ் வேகாஸ் பகுதியில் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான மக்களின் மீது, அருகாமையில் உள்ள கட்டிடத்தின் 32 வது மாடியில் மறைந்திருந்து கொண்டு குறித்த நபர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.அந்த நபர் 10 துப்பாக்கிகளில் பயன்படுத்தும் தோட்டாக்களை தொடர்ச்சியாக பயன்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் 50 பேர் கொல்லப்பட்டதுடன் 400-கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.லாஸ் வேகாசில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கி சூடு சம்பவமானது அமெரிக்க வரலாற்றில் மிகவும் கொடூரமான நிகழ்வு என குறிப்பிட்டுள்ளனர்.

லாஸ் வேகாசில் அமைந்துள்ள சூதாட்ட விடுதி, இரவு விடுதி மற்றும் ஷாப்பிங் மேற்கொள்வது என உலகெங்கிலும் இருந்து ஆண்டுக்கு 3.5 மில்லியன் மக்கள் வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Related posts: