ஆதரவற்ற குழந்தைகளுக்காக ரூ.37 லட்சம் வழங்கிய முகம் தெரியாத நபருக்கு நேரில் வருமாறு அழைப்பு!

Tuesday, January 24th, 2017

சுவிட்சர்லாந்து நாட்டில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக 37 லட்ச ரூபாயை வாரி வழங்கிய மர்ம நபரை நேரில் சந்தித்து நன்றிக் கூற விரும்புவதாக தொண்டு நிறுவனம் ஒன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சுவிஸில் உள்ள சூரிச் விமான நிலையத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக நிதி செலுத்தும் கண்ணாடி பெட்டி ஒன்று உள்ளது.இதே நாட்டை சேர்ந்த SOS Children’s Village என்ற தொண்டு அமைப்பு இந்த பணியை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் இந்த கண்ணாடிப் பெட்டியில் 25,000 பிராங்க்(37,21,722 இலங்கை ரூபாய்) பணம் கட்டுக்கட்டாக இருந்ததை பார்த்து தொண்டு நிறுவன ஊழியர்கள் வியப்படைந்துள்ளனர்.

இது குறித்து அண்மையில் அறிவிப்பு ஒன்றை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.அதில், ‘ஆதரவற்ற குழந்தைகளுக்காக நீங்கள் 25,000 பிராங்க் அளித்திருப்பது எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குழந்தைகள் மீது அக்கறை கொண்டுள்ள உங்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும்.

எனவே, எந்த நேரத்திலும் தங்களது தொண்டு நிறுவனத்தை தொடர்புக் கொள்ளுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், நபர் அளித்த பணத்தை பயன்படுத்தி இந்தியாவின் தலைநகரமான டில்லியில் உள்ள 168 ஆதரவற்ற குழந்தைகளுக்கு அழகான வீடு ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது

sos

Related posts: