அண்டார்டிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Tuesday, December 11th, 2018

அண்டார்டிக்காவில்  இன்று(11) காலை 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அர்ஜென்டினாவின், டியரா டெல் பியூகோ மற்றும் சிலி போன்ற நாடுகளில் குறித்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தின் மையப் பகுதியிலிருந்து சுமார் 250 கிலோமீட்டர் பகுதிவரையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து இதுவரை தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

Related posts: