தோல்வியடைந்த அரிசி மானியத் திட்டம்: முன்னாள் தாய்லாந்து பிரதமருக்கு அபராதம்?

Sunday, September 25th, 2016

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் இங்லக் ஷினவாட் பதவியிலிருக்கும் போது அரிசி மானியம் ஒன்றை அறிமுகப்படுத்தியதற்காக தாய்லாந்தின் இராணுவ அரசு அவருக்கு பில்லியன் டாலர் அபராதம் விதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

இந்த திட்டம் விவசாயிகள் தங்கள் பயிர்களை அதிக விலையில் விற்பதற்கு அனுமதித்தது.

பெரும் அலட்சியமாக இருந்து நஷ்டம் விளைவிக்கும் திட்டத்தை அமல்படுத்தியதாக அரசு கமிட்டி அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளது.

இங்லக் ஷினவாட், 2011 ஆம் ஆண்டு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்; ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன் ஆட்சிக் கவிழ்ப்பு சதியால் அவர் பதவி விலக நேரிட்டது.

ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையை திட்டமிட்டு அரங்கேற்றிய ராணுவம் தற்போது தன்னை நியாயமற்ற முறையில் இலக்கு வைத்திருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

_91373612_gettyimages-467457316

Related posts: