ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர்  நிஷா பதவி நீக்கம்!

Monday, January 30th, 2017

 

அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்பின் அறிவுறுத்தலுக்க அமைய ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர்  பதவியிலிருந்து நிஷா பிஸ்வால் விலக்கப்பட்டுள்ளார்.

2014ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதியிலிருந்து ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலாளராக  நிஷா பிஸ்வால், பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில், ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலாளராக, நிஷாவின் இடத்துக்கு  வில்லியம் ட்ரோட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தவிர, அமெரிக்காவின் ஐக்கிய நாடுகளின் தூதுவர் சமந்தா பவரும் அவரது பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர், அமெரிக்காவின் ஐக்கிய நாடுகளின்  28ஆவது தூதுவரான 2013ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதியிலிருந்து கடமையாற்றி வருகின்றார். அவரது இடத்துக்கு நிக்கி ஹெலிய் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

nisha_img

Related posts: