அல்ஜீரியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் 65 பேர் உடல் கருகி பலி!
Thursday, August 12th, 2021
அல்ஜீரியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 65 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். அல்ஜீரியாவின் வடக்கு பகுதியில் கபிலி (Kabylie) பிரதேசத்தில் உள்ள மலைக் காடுகளில் திங்கட்கிழமை இரவு 12க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டது.
வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்றினால், காட்டுத்தீ வேகமாகப் பரவி, அங்குள்ள சிறிய நகரத்தை முற்றாக சாம்பலாக்கியுள்ளது. தீவிரமாக பரவி வரும் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்களுடன் அல்ஜீரிய இராணுவமும் ஈடுபட்டுள்ளது.
காட்டுத் தீயில் சிக்கியும், தீயணைப்பு முயற்சிகளின் போதும், 65 பேர் உயிரிழந்துள்ளதாக அல்ஜீரியா அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் தீயணைப்பு பணியில் ஈடுபட்ட 28 இராணுவ வீரர்களும் அடங்கியுள்ளதாக, அல்ஜீரிய பிரதமர் அய்மான் தெரிவித்துள்ளார்.
Related posts:
இலண்டன் - சீனாவுக்கு இடையே உலகின் தொலை தூர புகையிரத சேவை!
கழிவுகளைத் தரம் பிரித்துப் போடுங்கள் - சுகாதாரப் பணிப்பாளர் மக்களுக்கு அறிவுறுத்தல்!
வாரமொன்றுக்கு 10 பேர் தொடருந்து அனர்த்தங்களுக்கு உள்ளாகின்றனர் - தொடருந்து திணைக்களத்தின் பிரதி பொது...
|
|
|


