ஜனவரி 5 ஆம் திகதிமுதல் 08 ஆம் திகதி வரை முதலாவது பாராளுமன்ற அமர்வு !

Friday, January 1st, 2021

2021 ஆம் ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு ஜனவரி 5 ஆம் திகதி செவ்வாய்கிழமை முதல் 08 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளததாக பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக்கூட்டத்தின் போது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், விசேட சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய 5 ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ளது.

அன்றையதினம் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.

ஆளும் கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் இந்த காலப்பகுதியில் நடத்தப்படவுள்ளது.

8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை பாராளுமன்றம் கூடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொவிட்-19 தொற்று பரவலை தடுப்பதற்காக சுகாதார பிரிவினரால் வழங்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்து 5 ஆம் திகதி தொடக்கம் பாராளுமன்ற அறிக்கையிடலுக்காக பாராளுமன்றத்திற்குச் செல்வதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக பாராளுமன்ற படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதற்கமைவாக ஒரு ஊடக நிறுவனத்தில் 2 ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் பாராளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், ஊடகவியலாளர்கள் இருவரில் பாராளுமன்ற அமர்வு ஊடாக அறிக்கையிடலுக்காக செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவது ஒருவருக்கு மாத்திரமே ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: