தூரநோக்கற்ற ஏமாற்றும் திட்டங்களை மக்களிடம் திணிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விரும்புவதில்லை – ஈ.பி.டி.பியின் வலி.மேற்கு பிரதேச நிர்வாக செயலாளர் செல்வக்குமார் சுட்டிக்காட்டு!

Saturday, February 27th, 2021

கடந்த நல்லாட்சி காலத்தில் மக்களுக்கான அபிவிருத்தி என்ற பெயரில் பெரும் ஊழல் மோசடிகளும் நிறைவுறுத்தப்படாத அபிவிருத்தி திட்டங்களுமே மேற்கொள்ளப்பட்டதால் வறிய மக்களை மேலும் வறியவர்களாக்கிய நிலையே காணப்பட்டதென தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வலிகாமம் மேற்கு பிரதேச நிர்வாக செயலாளர் செல்வக்குமார் அவ்வாறான தூரநோக்கற்ற ஏமாற்றும் திட்டங்களை மக்களிடம் திணிக்க எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விரும்பவதில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியினாலும் அதன் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களாலும் குறித்த பிரதேச அபிவிருத்திகள் மற்றும் மக்கள் நலன் சார் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது தொடர்பில் எமது செய்திப்பிரிவுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் ௲ கடந்த நல்லாட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அநேக திட்டங்களால் வலிகாமம் மேற்கு பிரதேசத்தில் வாழும் மக்கள் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருவதுடன் அது தொடர்பிலான நாளாந்தம் எமது கட்சி அலுவலகத்திற்கு வருகைதந்து தீர்வுகளை பெற்றுத்தருமாறு கோரிவருகின்றனர்.அவர்களது நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் நாம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுசென்று முடியுமானவரை தீர்வுகளை பெற்றுக்கொடுத்து வருகின்றோம்.

அதேநேரம் எமது கட்சியின் செயலாளர் நாயகமுமம் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை பெற்று மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் அவற்றில் எதுவித மோசடிகளோ அன்றி இடையூறுகளோ நடைபெறாத வண்ணம் மக்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும் என்பதிலுமே அதிக அக்கறை செலுத்தி வருகின்றார். இதனால் எமது கட்சியால் மேற்கொள்ளப்படும் சேவைகள் நிரந்தரமானதும் நீடித்த பலனை கொண்டதாகவும் அவர்களிடம் சென்றடைகின்றது.

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் இந்த நிலைப்பாட்டினால் யுத்தம் நிறைவுக்கு வந்த 2009 ஆம் ஆண்டின் பின்னர் தமிழ் மக்களுக்கு அவரால் பெற்றுக்கொடுக்கப்பட்ட 50 ஆயிரம் இந்நியன் வீட்டு திட்டமானாலும் சரி வீதிகள் அபிவிருத்தியானாலும் சரி விவசாய  திட்டங்களானாலும் சரி மற்றும் இதர அபிவிருத்திகள் மக்களுக்கான அடிப்படை தேவைகள் வாழ்வாதார உதவித்திட்டங்களானாலும் சரி மக்களிடம் முழுமையாக கிடைக்கப்பெற்றது. இதை எவரும் மறுக்க முடியாது.

ஆனால் நல்லாட்சி மலர்ந்தது என்று கூறி அந்த அரசுக்கு முண்டு கொடுத்து அக்காலப் பகுதியில் கம்பரெலிய உள்ளிட்ட அபிவிருத்திகளை மக்களுக்கு கொண்டுவந்துள்ளதாக கூறிய தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அந்த திட்டங்களின் பெரும் பகுதி நிதியை தமது சட்டைப் பபைகளில் கொண்டு சென்றுள்ளனர். இதன் வெளிப்பாடுகளாக அவர்கள் அமைத்த பல்வேறு வீதிகளும் மதகுகளும் சில மாதங்கள் அல்லது வருடங்களுக்குள் மிக மோசமாக சிதைந்து கிடக்கின்றன. வற்றையும் நாம் தற்போது புனரமைத்து மக்களுக்கு கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம்

அது மட்டுமல்லாது அக்காலத்தில் தமது தேர்தல் சுயநலன் கருதி வீடமைப்பு அதிகார சபையால் வழங்கப்பட்ட 6 இலட்சம் பெறுமதியான வீடுகள் இன்று முழுமைப்படுத்தப் படாதிருக்கின்றது. அதை பெற்றவர்கள் இன்று எமது பகுதியில் பெரும் கடனாளிகளாகவும் தற்கொலை செய்யும் நிலையிலும் இருந்த கொட்டகைகளைக் கூட இழந்த நிலையிலும் அல்லலுறுகின்றனர்.

அந்தவகையில் நாம் தற்போது கடற்றொழிலாளர்களுக்கு பல நலத்திட்டங்களை பெற்றுக் கொடுத்துள்ளளோம். அதேபோன்று நிலையான வீட்டுத் திட்டங்கள், மலசலகூட வசதிகள், இலவச மின்சார இணைப்புகள், அரச தொழில் வாய்ப்புகள், வீதி புனரமைப்புகள் ஆலயங்களின் அபிவிருத்தி, வாழ்வாதார உதவிகள், விளையாட்டுக் கழகங்களுக்கான தேவைப்பாடுகள் போன்றவற்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது முயற்சிகளாலும் முன்மொழிவுகளூடாகவும்  பெற்றுக்கொடுத்து வருகின்றோம்.

அத்துடன் எமது பிரதேச சபை உறுப்பினர்களூடாகவும் பிரதேச சபைமூலமாக பல அபிவிருத்திகளையும் சுகாதார நலன்களையும் மக்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளோம் என தெரிவித்த செல்வக்குமார் கடந்த நல்லாட்சி காலத்தில் மக்களுக்கான அபிவிருத்தி என்ற பெயரில் பெரும் ஊழல் மோசடிகளே நடைபெற்றுள்ளது எனவும் அதற்கு சாட்சியாக அராலி மேற்கு கடற்கரை அபிவிருத்தி மோசடி அமைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


உரிமையை வென்றெடுக்க அணிதிரள்வோம் – வட்டாரச் செயலாளர் ஒன்றுகூடலில் தேசிய அமைப்பாளர் பசபதி சீவரத்தினம்...
புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் தொகையை நாட்டிலேயே அழிக்க முடியும் - மத்திய சுற்றாடல் அத...
மாணவர்களுக்கு குறைந்தளவு காலப்பகுதியில் முதலாவது பட்டப்படிப்பை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புப் பெற்ற...