மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் இடம்பெறுவதாக கூறப்படும் சட்டவிரோத பரிவர்த்தனைகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைகள் ஆரம்பம்!

Sunday, December 13th, 2020

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் இடம்பெறுவதாக கூறப்படும் சட்டவிரோத பரிவர்த்தனைகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

போக்குவரத்து அமைச்சர் விடுத்த அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது

கடந்த நாட்களாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் வேரஹெர அலுவலகங்களில் சாரதி அனுமதி பத்திரம் வழங்குதல் மற்றும் அத்துடன் தொடர்புடைய மேலும் பல சட்டவிரோத பரிவர்த்தனைகள் இடம்பெறுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதற்கு முன்னர் அந்த திணைக்களத்திற்கு சென்று சிறப்பான முறையில் பொதுசேவை முன்னெடுக்கப்பட வேண்டும் என ஆலோசனை வழங்கியதோடு முறைகேடுகள் இன்றி சேவையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார்.

இந்தநிலையில் குறித்த சட்டவிரோத பரிவர்த்தனைகள் கடந்த பல ஆண்டுகளாக வௌ;வேறு தரப்பினரால் மேற்கொள்ளப்படுகின்றமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக விடயத்துடன் பொறுப்பான ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: