மானிப்பாய் மருத்துவமனைக்கு இருமாடிக் கட்டடம் வேண்டும்.

Wednesday, October 11th, 2017

மானிப்பாய் பிரதேச மருத்துவமனைக்கு நூறு கட்டில்கள் கொண்ட இருமாடி நோயாளர் விடுதிக் கட்டடம் ஒன்று உடனடியாக அமைக்கப்படவேண்டும். இதற்கு கொழும்பு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நிதி ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என மருத்துவமனை நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் இ.மனோகரன் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:

மானிப்பாய் பிரதேச மருத்துவமனை 28 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அடர்த்தியான சனத்தொகைக்கு மத்தியில் வளப்பற்றாக்குறைகளுடன் இயங்கிவருகிறது. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதற்காக வரும் நோயாளர்களில் 5 முதல் 10 வரையான நோயாளிகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வருகின்றோம்.

நாளொன்றுக்கு 400 முதல் 500 வரையான நோயாளர்கள் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர். வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவிலும் நெருக்கடி நிலவுகிறது. இதுவும் விரிவாக்கப்பட வேண்டும். நவீன வசதிகளைக் கொண்ட இருமாடிக் கட்டடத்தை அமைப்பதன் ஊடாக இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும். மக்களும் நன்மையடைவர். எனவே இதற்காக சுகாதார அமைச்சர் 2018ஆம் ஆண்டில் 140 மில்லியன் ரூபாவை ஒதுக்கித்தர வேண்டும் – என்றார்.

Related posts:


அத்துமீறி மீன்பிடிக்கும் கப்பல்கள் மீது இனிமேல் பல மில்லியன் ரூபா தண்டம் -அமைச்சர் மகிந்த அமரவீர!
எதிர்கால சந்ததியினரை சிறந்த முன்னோடிகளாக மாற்றியமைக்க அனுபவங்கள் பாடமாக இருக்க வேண்டும் – ஜனாதிபதி!
சுகாதார வழிமுறைகளை மீறிய 68 பேருந்துகளின் வீதி அனுமதிப்பத்திரங்கள் இரத்து - போக்குவரத்து இராஜாங்க அம...