உள்நாட்டு சந்தையில் வெங்காயத்தின் விலை குறைவடையும் – வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ எதிர்பார்ப்பு!

Thursday, March 21st, 2024

உள்நாட்டு சந்தையில் வெங்காயத்தின் விலை குறைவடையும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், சீனாவிடம் முன்பதிவு செய்யப்பட்ட பெரிய வெங்காயம் இன்னும் 5 நாட்களில் நாட்டிற்கு கிடைக்கப்பெறும்.

அதன்பின்னர் உள்நாட்டு சந்தையில் வெங்காயத்தின் விலை குறைவடையும். இதற்கு மேலதிகமாக பெரிய வெங்காயத்திற்கு பதிலாக இளஞ்சிவப்பு வெங்காயத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இளஞ்சிவப்பு வெங்காய இறக்குமதிக்கு அறவிடப்படும் 70 ரூபாய் வரி 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1500 ஐக் கடந்தது - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு...
செயன்முறை பரீட்சைகளில் பங்குக்கொள்ள முடியாதோருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு - பரீட்சைகள் ஆணையாளர் அறிவி...
இனப்படுகொலை தொடர்பில் கனேடிய நாடாளுமன்றத்தின் தீர்மானம் – வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் கடும் எதிர்ப்பு...