பிளாஸ்டிக்கின் உற்பத்தி செலவை குறைக்கும் புதிய தொழில்நுட்பம்!  

Monday, October 29th, 2018

இயற்கைக்கு பெரிதும் ஆபத்தாக காணப்படும் பிளாஸ்டிக் பாவனையை குறைப்பதற்கு பல்வேறு நாடுகள், அமைப்புக்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

எனினும் இதன் உற்பத்தியானது குறைந்தபாடில்லை. காரணம் நாளாந்தம் பிளாஸ்டிக் பொருட்களுக்கான கேள்வி அதிகரித்து வருகின்றமையாகும்.

இவ்வாறானதொரு நிலையிலேயே பிளாஸ்டிக்கை உருவாக்கும் புதிய தொழில்நுட்பம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது வழமையான முறையிலும் பார்க்க குறைந்த செலவில் பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்ய உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட எதேன் சேர்வையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட எதிலீன் இப் புதிய தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படுகின்றது. இம் முறையினை அமெரிக்காவில் உள்ள National Institute of Standards and Technology நிறுவனமே கண்டுபிடித்துள்ளது.

இதேவேளை ஆண்டு தோறும் உலகளாவிய தேவைக்காக சுமார் 170 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts: