நாட்டில் எனக்கு பெரும்பான்மையானோரின் ஆதரவு உள்ளது – நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டுமென நாட்டின் பெரும்பான்மையான மக்கள் விரும்புகின்றனர் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Friday, September 30th, 2022

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டுமென நாட்டின் பெரும்பான்மையான மக்கள் விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச சமூகத்திடம் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் ABC ஊடக வலையமைப்பின் ‘வெளிநாட்டு நிருபர்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜனாதிபதியிடம் – அண்மைக்காலமாக பல செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுகின்றனர். அது நெருக்கடியைத் தீர்க்குமா? என கேட்கப்பட்டதற்கு, அரச சொத்துக்களை எரிப்பதன் மூலம் இந்த நெருக்கடியைத் தீர்க்க முடியும் என்று நான் நினைக்கவில்லை என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஜனாதிபதியின் அலுவலகத்தைக் கைப்பற்றுவதன் மூலமோ,எனது வீட்டுக்கு தீ வைப்பதன் மூலமோ, பிரதமர் அலுவலகத்தைக் கைப்பற்றுவதன் மூலமோ அல்லது பாராளுமன்றத்தைக் கைப்பற்றுவதற்கு அவர்கள் ஒன்றிணைவதன் மூலமோ எங்களின் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க முடியும் என நீங்கள் நினைக்கிறீர்களா? என கேள்வியெழுப்பியுள்ளார்.

அத்துடன் சட்டத்தை மீறியவர்களை கைது செய்கிறோம். நான் அதைச் செய்பவன் அல்ல. உங்கள் நாட்டைப் போலவே, பொலிஸார் செய்கிறார்கள். மேலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்களா என்பதை பொலிஸாரே தீர்மானிக்கின்றனர். அனைத்தும் சட்டப்படி செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை இந்தச் சிறிய அளவிலான சம்பவங்களை என்னிடம் கேட்க முயற்சிக்கிறீர்கள். ஆனால் பெரும்பான்மைக்கு நான் பதில் சொல்கிறேன்.

இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் அவதியுறுகிறார்கள், அவர்களுக்கு தீர்வு தேவை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவர்கள் மேற்கண்ட சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் அல்ல என சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் – உங்கள் நாட்டில் உங்களுக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளதா? என கேட்கப்பட்டதற்கு ஆம் என பதிலளித்த ஜனாதிபதி, IMFக்கு செல்வதுதான் சரி என நான் தான் சொன்னேன். அதனால் தான் எனக்கு ஆதரவளிக்கும் நம்பிக்கை உள்ளது. அதனால் தான் நான் அதைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


இராஜதந்திர உறவுகளையும் எமது வாழ்வாதாரத்!தையும் பாதிக்காத வகையில் - இந்திய கடற்றொழிலாளர் விகாரத்திற்க...
டீசல் வழங்கலில் தனியார் பேருந்துகளுக்கு முன்னுரிமை - தனியார் பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை!
கடந்த மூன்று வருடங்களுக்குள் 132 சிறுமிகள் விருப்பத்தின் பேரில் பாலியல் துஷ்பிரயோகம் - கண்டி தேசிய வ...