கடந்த மூன்று வருடங்களுக்குள் 132 சிறுமிகள் விருப்பத்தின் பேரில் பாலியல் துஷ்பிரயோகம் – கண்டி தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் அதிர்சசி தகவல்!

Thursday, December 21st, 2023

கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 17 பொலிஸ் நிலையங்களின் பிரதேசங்களில் கடந்த மூன்று வருடங்களுக்குள் 16 வயதுக்கு குறைந்த சிறுமிகள் 132 பேர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் வைத்தியரான சட்டத்தரணி பாலித பண்டார சுபசிங்ஹ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் –

2020 மற்றும் 2022 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் 16 வயதுக்கும் குறைந்த சிறுமிகள் 132 பேர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுடைய விருப்பத்தின் பேரில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டள்ளமையானது பெரும் அபாயகரமானது என்றும் வைத்தியர் தெரிவித்தார்.

மேலும், 17 பொலிஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிகளில், 15 சிறுமிகள் தங்களுடைய விரும்பமின்றி துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

14 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட சிறுமிகளில் 2021 ஆம் ஆண்டு 79 பேரும், 2022 இல் 93 பேரும் கண்டி வைத்தியசாலையின் நீதிமன்ற வைத்திய பிரிவுக்கு, வைத்திய பரிசோதனைக்கு பொலிஸ் நிலையங்களின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

2018 முதல் 2021 வரையில், 16 வயதுக்கும் குறைந்த சிறுமிகள் பாலியல் ரீதியில் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்நாட்டிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு 6,307 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. ​

அதில் 5,055 முறைப்பாடுகள் சிறுமிகளால் தங்களுடைய விருப்பத்தின் பேரில் முன்வந்து செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: