வறட்சியால் வடக்கு, கிழக்கில் 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!

Saturday, June 3rd, 2017

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வறட்சியின் காரணமாக 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 35 ஆயிரத்து 670 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரைத்துறைப்பற்று, புதுக்குடியிருப்பு, மணலாறு, ஒட்டுச்சுட்டான், துணுக்காய், மாந்தை கிழக்கு போன்ற ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகள் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், யாழ்ப்பாணத்திலும் பல்வேறு பகுதிகளில் நிலவும் வறட்சியான காலநிலையின் காரணமாக, 1 இலட்சத்த 30 ஆயிரம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பகுதிகளில் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பகுதியில் கடுமையான குடிநீர்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது அங்கு நீர்தாங்கிகளின் ஊடாக நீர் விநியோகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts:


நாட்டில் 7 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா மரணங்கள் – வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோரது எண்ணிக்கையும் 5...
பால்மாவுக்கான விலையை அதிகரிக்க இதுவரை தீர்மானிக்கப்படவில்லை - விலையேற்றம் தொடர்பில் வாழ்க்கை செலவு க...
டிஜிட்டல் சேவை வரி குறித்து இலங்கையுடன் கலந்துரையாடவில்லை - சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு!