அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் சகோதரர் காலமானார்!
Sunday, August 16th, 2020
அமெரிக்க ஜனாதிபதியின் சகோதரரான ரோபர்ட் ட்ரம்ப், தனது 72 ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.
உடல் நலக் குறைவினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த அவர், நியூயோர்க்கில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து ஒரு அறிக்கையில் டொனால்ட் ட்ரம்ப்,
எனது அருமையான சகோதரர் ரோபர்ட் நேற்று இரவு (சனிக்கிழமை) அமைதியாக காலமானார் என்பதை நான் மிகுந்த மனதுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
அவர் என் சகோதரர் மட்டுமல்ல, அவர் என் சிறந்த நண்பர். அவரை நான் பெரிதும் தவற விடுகிறேன், ஆனால் நாங்கள் மீண்டும் சந்திப்போம். அவரது நினைவு என் இதயத்தில் என்றென்றும் நிலைத்திருக்கும் என கூறியுள்ளார்.
Related posts:
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட்: சாதனை படைத்த ஸ்டோனிஸ்!
கொரோனா வைரஸ் - தென் சுவிற்சர்லாந்திலும் அவசரகாலநிலையில்!
வடக்கு காசா பகுதிக்கான உணவு விநியோகத்தை நிறுத்த உலக உணவு திட்டம் முடிவு!
|
|
|


