மெக்சிகோவில் 22லட்சம் வாகனங்களுக்கு தடை!

Thursday, May 5th, 2016

மெக்சிகோவில் காற்று மாசுபாடு அபாயகரமான அளவைத் தாண்டியதால் அங்கு 40 சதவீதமான கார்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோவில் கடந்த மார்ச் மாதம் புகை மாசுபாட்டின் அளவு, நிர்ணயிக்கப்பட்ட 150 அலகுகளைத் தாண்டி 161 ஐத் தொட்டது.இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், வாகனப்புகை வெளியேற்றத்தையும், தொழிற்சாலை காற்று மாசுபாட்டையும் கட்டுப்படுத்தும் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வாகனங்களை இயக்குவதற்காக கூடுதல் கட்டுப்பாடுகளை மெக்சிகோ நகர அதிகாரிகள் திங்கட்கிழமை வெளியிட்டனர்.அதன்மூலம், அந்த நகரில் இயங்கும் 55 இலட்சம் வாகனங்களில் 40 சதவீத வாகனங்களை, அதாவது சுமார் 22 இலட்சம் வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுதவிர, தொழிற்சாலைகளுக்கான புகை வெளியேற்றக் கட்டுப்பாடுகளையும் அதிகாரிகள் கடுமையாக்கியுள்ளனர்.

அதன்படி, தலைநகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாகாணங்களில் அமைந்துள்ள சிமெண்ட், இரசாயனம், மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகள், எண்ணெய் நிறுவனங்கள், மின் உற்பத்தியகங்கள் ஆகியவை தங்கள் புகை வெளியேற்றத்தை 40 சதவீதம் குறைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.அதிகாரிகள் மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கைகள் காரணமாக, 161 அலகுகளாக இருந்த மெக்சிகோவின் புகை மாசுபாட்டு அளவு, கடந்த மாதம் 150 ஆகக் குறைந்ததாகக் கூறப்படுகிறது

Related posts: