கொரோனா வைரஸ் – தென் சுவிற்சர்லாந்திலும் அவசரகாலநிலையில்!
Tuesday, February 25th, 2020
கொரோனா நுண் கிருமி சுவிற்சர்லாந்தின் எல்லையை வந்தடைந்தது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் சுவிற்சர்லாந்து தனது முதன்மை சுற்றுலா பயணிகளான சீனர்களுக்கு நாட்டுக்குள் நுழைய தடைவிதித்திருந்தது.
அதன் அடுத்த கட்டமாக சீனாவின் இறக்குமதியையும் தபால் போக்குவரத்தையும் தடை செய்தது. ஓரளவேனும் கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க சுவிற்சர்லாந்து அரசாங்கம் முன்னகர்வுகளை மேற்கொண்டிருந்தது.
எனினும் சுவிசின் எல்லைக்கு அருகே இத்தாலியில் கொரோனா தாக்கத்துக்குள்ளானோரால் புதுப்பிரச்சனை எழுந்துள்ளது. இதனையடுத்து தென் சுவிற்சர்லாந்து அவசரகாலநிலையில் உள்ளதாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சுற்றுலாப் பயணிகளின் இரண்டு விமானங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து - 04 பேர் உயிரிழப்பு!
தஞ்சம் கோருவோரின் தற்காலிக வதிவிட அனுமதி நீடிப்பு; பிரான்ஸ் பாராளுமன்றம் அனுமதி!
நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது - சுகாதார அமைச்சின் புதிய செயலாளர் ...
|
|
|


